Posts

Showing posts from October, 2024

15நாட்கள் ஊடகவியலாளர் பயிற்சி பட்டறை நடைப்பெற்று முடிந்த பிறகு அதனை நேரில் காண சென்னைக்கு சென்றிருந்தோம்.

Image
 15 நாட்கள் ஊடகவியலாளர் பயிற்சி பட்டறை நடைப்பெற்று முடிந்த நிலையில் அதனை நேரில் காண சென்னைக்குச் சென்றிருந்தோம்.    குடைவரைக் கோயில்:          புடைப்புச் சிற்பம் என்று கூறுவார்கள்.இது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது.அடிமைத்தனம் என்பது அந்தக் காலத்தில் இருந்தது என்று அந்த சிற்பங்களில் தெரிகின்றது.இந்திரன் ஏற்படுத்திய புயல் மற்றும் மழையிலிருந்து பசுக்கூட்டங்களையும் கோபியர் மற்றும் ஆயர்களையும் காப்பாற்ற கிருஷ்ணர் தன் இடது கையால் கோவர்த்தன மலையைத் தூக்கும் காட்சி இங்கு செதுக்கப்பட்டுள்ளது.இப்புடைப்பு சிற்பத்தின் முன் மண்டபம் கி.பி 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மாமல்லபுரம்:          மாமல்லபுரத்தில் ஐந்து ரதங்கள் காணப்பட்டது.முதலில் திரௌபதி ரதம் இது ஒரு அடுக்கு. அர்ஜுனா ரதம் இது ஐந்து அடுக்கு.பீமா ரதம் மிக பெரியதாக இருந்தது. மூன்று தளங்களை உடைய விமானம் எண்படைச்  சிகரத்தோடு தர்மராஜ் ரதம் காணப்பட்டது. நகுல சகாதேவன் தூங்கானை மாட அமைப்பைக் கொண்டது. பல்லவர்களின் சிலை தலை நிமிர்ந்து தான் இருக்கும்.      கன்னிமாரா நூ...